கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 02ஆம் திகதி வரை விளக்கமறிலில் வைக்குமாறு கடுவலை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 08ஆம் திகதி அத்துருகிரிய பிரதேசத்தில் உள்ள பச்சை குத்தும் நிலையம் ஒன்றின் திறப்பு விழாவின்போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன் பிரபல பாடகியான கே. சுஜீவா உட்பட 4 பேர் காயமடைந்திருந்தனர்.
இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கடந்த 29ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post