உலகம் முழுவதும் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ள நிலையில், கிறிஸ்துமஸ் மரம் போன்ற தோற்றத்தைக் கொண்ட நட்சத்திரக்கூட்டங்களின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.
இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
எதிர்வரும் டிசம்பர் 25 ல் உலகம் முழுவதும் கிறிஸ்மஸ் கொண்டாடப்படவுள்ள நிலையில் நாசா வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.
பூமியில் இருந்து சுமார் 2,500 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் கிறிஸ்மஸ் மரம் போன்ற வடிவில் உள்ள நட்சத்திரக் கூட்டத்தை நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சந்திரா கண்காணிப்பகம் படம் பிடித்துள்ளது.
நமது பால்வழி அண்டத்தில் சூரிய குடும்பத்துக்கு அடுத்தப்படியாக பச்சை நிறத்தில் இந்த விண்மீன் திரள்கள் காட்சியளிக்கின்றன.
Discussion about this post