கிராம உத்தியோகத்தர்கள் தொடர்பாக அமைச்சரவைக்கு புதிய யோசனை முன்வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அத்துடன் 2002 கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ளும் பணி விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவல்களை இராஜாங்க அமைச்சர் அசோக பியந்த வெளியிட்டுள்ளார்.
பயண செலவுகள் – அலுவலக கொடுப்பனவுகள்
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கிராம உத்தியோகத்தர்கள் தொடர்பான சட்டத்தை தயாரிப்பதற்கான பத்திரம் மற்றும் கிராம உத்தியோகத்தர்களின் பயண செலவுகள் மற்றும் அலுவலக கொடுப்பனவுகள் தொடர்பான யோசனை என்பன அமைச்சரவையில் கையளிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, அதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தபின்னர் மேலதிக நடவடிக்கைகளும் பரிந்துரைக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது வெற்றிடமாக உள்ள 2002 கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ளும் பணிகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் மேற்கொள்ள அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post