தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என கிராம உத்தியோகத்தர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
குறித்த விடயத்தை இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் நந்தன ரணசிங்க (Ndana Ranasinghe) தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், எதிர்வரும் 24 ஆம் திகதி அதிபர் காரியாலயத்தில் தங்களது பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பள கொடுப்பனவு
இந்தநிலையில், தற்பொழுது சட்டப்படி வேலை என்ற தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, சம்பளம் மற்றும் கொடுப்பனவு போன்றவற்றை மறுசீரமைத்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை கிராம உத்தியோகத்தர்கள் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவை
நபர் ஒருவரின் மரணத்தின் போது வழங்கப்படும் ஆவணங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கி வருவதாகவும் நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கிராம சேவை சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் நந்தன ரணசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post