உலகின் பல்வேறு நாடுகளில் வேவ்வேறு விதமான பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காக்களில் மரம், செடி, கொடி என பல வகையான தாவரங்கள் இருக்கும்.
எனினும், உலகின் மிகச்சிறி பூங்கா எனும் கின்னஸ் சாதனையை படைத்த பூங்காவில் ஒரே ஒரு செடி மாத்திரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மில் எண்ட்ஸ் பார்க் ‘மில் எண்ட்ஸ் பார்க்’ (Mill Ends Park) எனப்படும் பூங்கா உலகின் மிகச்சிறிய பூங்காவாக பெயரிடப்பட்டுள்ளதாக கின்னஸ் உலக சாதனை அறிக்கை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள போர்ட்லேண்டில் இந்த பூங்கா அமைந்துள்ளது. முதன்முதலில் 1948 ஆம் ஆண்டில் மில் எண்ட்ஸ் பார்க் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, 1976 ஆம் ஆண்டில், இந்த பூங்கா உலகின் மிகச்சிறிய பூங்காவாக கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றது.
மில் எண்ட்ஸ் பார்க் என்று பெயரிடப்பட்ட இந்த சிறிய பூங்கா 1946 இல் டிக் ஃபேகன் என்பவரால் நிறுவப்பட்டது. இராணுவத்தில் பணியாற்றிய டிக் ஃபகன், இரண்டாம் உலகப் போரின் நிறைவில் ஓரிகானுக்குத் திரும்பினார். இதனை தொடர்ந்து, ஓரிகான் ஜர்னலில் பத்திரிகையாளராகப் பணியாற்றினார்.
இதன் போது, அவரது அலுவலகத்துக்கு முன்பாக மின்விளக்கு கம்பம் நடுவதந்கு குழி தோண்டப்பட்டிருந்தாலும், நீண்ட நாட்களாக குறித்த இடத்தில் மின்விளக்கு கம்பம் அமைக்கப்படவில்லை.
இந்த நிலையில், குறித்த இடத்தில் டிக் ஃபகன் பூச்செடி ஒன்றை நட்டார். மில் எண்ட்ஸ் இதையடுத்து, பூங்காக்கள் தொடர்பில் அவர் மில் எண்ட்ஸ் எனும் பெயரில் பத்திரிக்கைக்கான கட்டுரைகளை எழுத ஆரம்பித்தார்.
இந்த பின்னணியில், ஒரே ஒரு செடியைக் கொண்ட இந்த பூங்கா மில் எண்ட்ஸ் என பெயரிடப்பட்டது. இந்த சிறிய பூங்கா, 2 அடி அகலத்தில் அமைந்துள்ளதோடு, இதன் மொத்த பரப்பளவு 452 சதுர அங்குலங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post