கல்வி கற்பதற்காக பௌத்த பிக்குவாக இலங்கை வந்த பங்களாதேஷ் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேஸ்புக் மூலம் அறிமுகமான யுவதியொருவரை காதலித்து காவி உடையை களைந்து காதலியுடன் வாழ்ந்து கொண்டிருந்தபோது மஹியங்கன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் மணிக் பருவா என்ற 31 வயதான பங்களாதேஷ் நாட்டவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபர் , விசா முடிந்த நிலையில்கூட, தொடர்ந்தும் இலங்கையிலேயே தங்கி வந்துள்ளார் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
Discussion about this post