காவல்துறை மா அதிபர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையை சபாநாயகர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோருடன் கலந்துரையாடி தீர்க்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், காவல்துறை மா அதிபரின் பிரச்சினை எதுவாக இருந்தாலும் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தனது ஆதரவை வழங்குவதாக அவர் சபாநாயகருக்கும் பிரதம நீதியரசருக்கும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
குறித்த விடயத்தை ரணில், நேற்று காலை (27) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) மற்றும் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய (Jayantha Jayasuriya) ஆகியோருக்கு தனித்தனியாக தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக ரணில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post