அலவத்துகொட (Alawatugoda) பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்ட இருவரை சோதனையிடச் சென்ற போது, காவல்துறையினரின் பணிகளுக்கு இடையூறு விளைவித்த 4 சந்தேக நபர்களை கைது செய்ததாக அலவத்துகொட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன் போது, 18 வயதுக்கும் 53 வயதுக்கும் இடைப்பட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அலவத்துகொட காவல்துறை பிரிவுக்குட்பட்ட பிரதான காவலதுறை பரிசோதகர் உட்பட 4 உத்தியோகத்தர்கள் சுற்றிவளைப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த போது, அலவத்துகொட பிரதேசத்தின் கொனகலகல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்ட இரு சந்தேக நபர்களை சோதனையிடச் சென்ற போது, சந்தேக நபர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கைது நடவடிக்கை
இது தொடர்பில் காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கியதையடுத்து, நிலைய கட்டளைத் தளபதி உள்ளிட்ட அதிகாரிகள் குழு அந்த இடத்திற்குச் சென்றபோது, அந்த இடத்தில் சுமார் 30 பேர் கூடியிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, குற்றவியல் பலாத்கார குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டதாக அலவத்துகொட காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
Discussion about this post