அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட அவர்கள் அந்த இடங்களில் இருந்து அகற்றப்பட்டமை தொடர்பாக நாடாளுமன்றத்தில் நாளைமறுதினம் விவாதம் நடைபெறவுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல, பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த விவகாரம் பற்றி விவாதிப்பதற்காக இன்று நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று எதிரணி பிரதமர் கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல, பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். எனினும், அந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
நாளைமறுதினம் அவசரகாலச் சட்டம் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளது. அன்று காலிமுகத்திடல் விவகாரம் தொடர்பாக விவாதிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post