எதிர்வரும் 27ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள அவசரகாலச் சட்டம் தொடர்ந்து நீடிக்கப்பட முடியாத நிலைமையே காணப்படுகின்றது.
கடந்த மாதம் 27ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், நாடாளுமன்றம் தற்போது எதிர்வரும் 29ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அவசர காலச் சட்டத்தை நீடிக்க வேண்டுமாயின் எதிர்வரும் 27ஆமு் திகதி நாடாளுமன்றத்தில் மீண்டும் ஒப்புதல் பெற வேண்டியுள்ள நிலையில், எதிர்வரும் 27ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படாது என்று அறியமுடிகின்றது.
எதிர்வரும் 27ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அனுமதி பெறாவிட்டால் தற்போது நடைமுறையில் உள்ள அவசர காலச் சட்டம் தானாகவே செயலிழக்கும்.
அதனால் அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கான ஏதுநிலை காணப்படாது என்று தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post