ஜனாதிபதியின் செயலாளராக காமினி சேதர செனரத், இன்று (19) கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த போது மேலதிக செயலாளராகவும், ஜனாதிபதியின் பணிக்குழாமின் பிரதானியாகவும் பணியாற்றிய காமினி செனரத், 2019 நவம்பர் மாதம் 21ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் பிரதமரின் செயலாளராக பதவியேற்றார்
களனி பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான காமினி செனரத் 1984ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் தனது பணியை தொடங்க்கினார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் கணனி தொழிநுட்பத்தில் பட்டப்பின்படிப்பை முடித்துள்ள அவர், பல்வேறு வெளிநாட்டு கற்கை நெறிகளையும் முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post