ஆசிரியை ஒருவரிடம் இருந்து 23 இலட்சத்து 30 ஆயிரத்து 600 ரூபாவை மோசடி செய்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரை மொனராகலை பிரிவின் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தேடி வருகின்றனர்.
32 வயதான ஆசிரியை பண்டாரவளை பிரதேசத்தில் வசிக்கும் தனியார் காப்புறுதி நிறுவனத்தின் முகாமையாளருடன் காதல் கொண்டுள்ளார்.
கார் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு தேவைகளை கூறி பல சந்தர்ப்பங்களில் 23 லட்சத்து 30 ஆயிரம் 600 ரூபாவை காப்புறுதி நிறுவன முகாமையாளர் ஆசிரியையிடம் இருந்து பெற்றுகொண்டுள்ளார்.
ஆசிரியருக்கு தெரிந்தே கடன் அட்டையை பயன்படுத்தி பல சந்தர்ப்பங்களில் பணம் பெற்று மோசடி செய்துள்ளார்.
அந்த நபர் திருமணமான இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதை அறிந்த ஆசிரியை சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
அதையடுத்து சம்பவம் தொடர்பில் மொனராகலை பிரிவின் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Discussion about this post