நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறியது போல் இலங்கையில் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான சனல் 4 காணொளி நீக்கப்படவில்லை.
சனல் 4 இணையதளத்தில் இருந்து காணொளி நீக்கப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எனினும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்த ஆவணப்படத்தை முன்னெடுத்த பேஸ்மென்ட் பிலிம்ஸின் நிறுவனர் பென் டி பியர், காணொளி இன்னும் சனல் 4 இல் உள்ளது என்றார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (TMVP) முன்னாள் ஊடகப்பேச்சாளர் அசாத் மௌலானா, சனல் 4 இல் முன்னிலையாகி, 2019 ஆம் ஆண்டு தாக்குதல்களுக்கு முன்னர் ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாரிகளை சிறிலங்கா இராணுவ உளவுத்துறை சந்தித்ததாகக் தெரிவித்தார்.
சனல் 4 டிஸ்பாட்ச் ஆவணப்படத்தில், கிழக்கில் சந்திப்பு இடம்பெற்றதாகவும், தானும் கலந்துகொண்டதாகவும் மௌலானா குறிப்பிட்டார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாரி சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சாலே ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக மௌலானா குற்றஞ்சாட்டினார்.
தற்போது வெளிநாடுகளில் புகலிடம் கோரியுள்ள முன்னாள் ஊடகப்பேச்சாளர், ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற தூதரக அதிகாரிகளுடன் தகவலை பகிர்ந்துள்ளார்.
Discussion about this post