பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த 48 வயதான Heath Coleman என்ற விமானியே, ஆல்பர்ட்டாவில் காட்டுத்தீயை அணைக்க போராடிய நிலையில் ஜூன் 28ம் திகதி மரணமடைந்துள்ளார்.
சம்பவத்தன்று Bell 212 ரக ஹெலிகொப்டரை இயக்கியிருந்த விமானி Heath Coleman கட்டுப்பாட்டை இழந்து, பற்றியெரியும் தீக்குள் ஹெலிகொப்டருடன் விபத்தில் சிக்கியுள்ளார்.
திறமையான மற்றும் அனுபவம் மிக்க விமானி, விபத்தில் சிக்கியதன் காரணம் தொடர்பில் உரிய அதிகாரிகள் தரப்பு விசாரணை முன்னெடுத்துள்ளனர்.
ஜூன் 22 முதல் எவன்ஸ்பர்க் அருகே 175 ஹெக்டேர் நிலப்பரப்பில் காட்டுத்தீ எரிந்து வருகிறது.
இதனிடையே, ஒட்டாவாவில் வீர மரணமடைந்த தீயணைப்பு வீரர்களுக்கான தேசிய நினைவுச்சின்னத்தில் கோல்மனின் பெயர் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Discussion about this post