காசாவின் அல்ஸிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் நள்ளிரவில் தாக்குதலொன்றை மேற்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனைக்குள் டாங்கி மற்றும் துப்பாக்கி பிரயோக சத்தங்கள் கேட்பதக தெரிவிக்கபப்டும் நிலையில், தாங்கள் மிகவும் துல்லியமான உயர் இலக்கை மையப்படுத்திய தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ளனர் எனவும் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் மீண்டும் தாக்குதல்
அதேவேளை மருத்துவமனைக்குள் ஹமாஸ் அமைப்பினர் மீண்டும் ஒன்றுசேர்ந்து தாக்குதலில் ஈடுபடுகின்றனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
காசாநகரில் உள்ள மருத்துவமனையில் பதற்றநிலை காணப்படுவதனால், டாங்கிகள் எங்களை சூழ்ந்துள்ளன நாங்கள் கூடாரங்களுக்குள் மறைந்திருக்கின்றோம் டாங்கிகளின் சத்தங்களை எங்களால் கேட்க முடிகின்றது என அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சமூக ஊடகங்களில் வெளியாகும் உறுதிப்படுத்தப்படாத வீடியோக்களில் மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளில் துப்பாக்கி சத்தங்களை கேட்க முடிகின்றது. இந்நிலையில் மருத்துவமனைக்குள் இராணுவத்தினர் காணப்படுகின்றனர் பலர் கொல்லப்பட்டுள்ளனர் காயமடைந்துள்ளனர் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பேரழிவு நிலை காணப்படுகின்றது என ஊடகவியலாளர் ஒருவர் மருத்துவமனைக்குள் இருந்து தெரிவித்துள்ளார்.
அதேவேளை இஸ்ரேலிய படையினர் மிகவும் உறுதியான புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் செயற்படுகின்றனர் என இஸ்ரேலிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.
Discussion about this post