இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கி பிரயோகத்தினால் வாகனம் சேதமடைந்ததை தொடர்ந்து காசாவிற்கான மனிதாபிமான நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.
அதோடு தாக்குதலில் தமது வாகனம் சிக்கியது இதுவே முதல்தடவை என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட்ட போதிலும் சோதனை சாவடிக்கு அருகில் தமது வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.
இது ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ள உலக உணவு திட்டத்தின் தலைவர் சின்டி மக்கெய்ன், காசாவில் தனது அமைப்பின் பணியாளர்களின் உயிருக்கு ஆபத்தைஏற்படுத்தியுள்ள தொடர்ச்சியான சம்பவங்களில் இதுவும் ஒன்று என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இஸ்ரேல் – ஹமாஸ் தற்போதைய மோதல் தவிர்ப்பு முறை தோல்வியடைந்து வருகின்றதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post