யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் சில நாள்களுக்கு முன்னர் கழுத்து வெட்டப்பட்டுக் கொல்லப்பட்ட 78 வயதுப் பெண் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டமை உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை காங்கேசன்துறை கொல்லங்கலட்டியில் வீட்டில் தனித்து வாழ்ந்த சாணை தவமணி என்ற 78 வயதுப் பெண் கழுத்து வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார். அவரது நகைகளோ, வீட்டில் இருந்த பொருள்களே திருடப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
பெண்ணின் உடல் மீட்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தது. உடற்கூற்றுப் பரிசோதனை யாழ்ப்பாணம் பொதனா மருத்துவமனையின் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் நடைபெற்றது.
பெண் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் சந்தேகநபர் தொடர்பான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்றும் சந்தேகநபர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் தெரிவித்தனர்.
78 வயதுப் பெண் ஒருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Discussion about this post