இலங்கையில் தற்போது நிலவும் காகிதத் தட்டுப்பாட்டால் வர்த்தமானி அறிவித்தலைக் கூட அச்சிட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்று அரசாங்க அச்சகத் திணைக்களத்தின் ஆலோசகரும், முன்னாள் செயலாளருமான அதுல தெரிவித்துள்ளார்.
டொலர் தட்டுப்பாட்டால் காகிதங்கள் இறக்குமதி செய்ய முடியாத நிலைமை காணப்படுகின்றது. அதனால் நாட்டில் காகிதாதிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் காகிதத் தட்டுப்பாட்டால் வர்த்தமானி அறிவித்தல்கள், அரச திணைக்களங்களுக்கான சிட்டைகள், மின்சாரப் பட்டியல் என்பவற்றை அச்சிட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்று அதுல தெரிவித்துள்ளார்.
Discussion about this post