பொருளாதார நெருக்கடியைத் தாங்க முடியாமல் 60 வயதுடைய தந்தை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கல்கமுவ – வலஸ்வெவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சிறிய குடிசையில் மனைவியுடன் வசித்து வந்த அவர், சேனை விவசாயியாகவும், கூலித் தொழிலாளியாகவும் பணியாற்றி வந்தார். அவர் விவசாய நடவடிக்கைகள் எரிபொருள் மற்றும் உரப் பற்றாக்குறையால் தோல்வியில் முடிந்த நிலையில், வாழ்வாதாரத்துக்காக அவர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தார் என்று தெரியவருகின்றது.
குடும்பத்தினர் தற்போது நிலவும் நெருக்கடியான சூழலில் முறையான உணவைக் கூட பெற முடியாத அவல நிலையில் பல நாள்களாக இருந்த நிலையில், அவர் அது தொடர்பில் மிகக் கவலையுற்றவராகவும், விரக்தியுற்ற நிலையும் கடந்த சில நாள்களாகக் காணப்பட்டார் என்று கூறப்படுகின்றது.
கடந்த 29ஆம் திகதி காலை வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் மாலை வரை வீடு திரும்பவில்லை. பின்பு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்தவரின் சடலம் காணப்பட்டது என்று உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்தார். இந்தச் சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post