இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி என்ற நோய்க்கு சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்படும் மருந்து தீர்வாக அமையாது. மாறாக அது நோயை தீவிரப்படுத்தும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
‘சர்வதேச நாணய நிதியமானது, அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையின் ஓர் அங்கமாகும். எனவே, ‘பொருளாதார நெருக்கடி’ என்ற பிரச்சினைக்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதால் தீர்வு கிட்டாது, நோயை குணப்படுத்துவதற்கு அல்ல, மாறாக நோயைத் தக்க வைத்துக்கொள்ளவே அங்கிருந்து மருந்து வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தை நாடினால் மீண்டெழலாம் என நினைப்பது தவறு. அதன்மூலம் சமூக நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என்பதே உண்மை என்றும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post