எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் ஏற்படும் அமைதியின்மையை கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அமைதியின்மையில் ஈடுபடுவோர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
இதேவேளை, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக 4 ஆயிரம் சைக்கிள்களை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், பொலிஸாரின் கடமைகளை இலகுவாக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
Discussion about this post