Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கலை இலக்கியப் பயணத்தில் சாதித்த கலை இலக்கிய ஆளுமை – உதயன் ஆசிரியர் லோகேந்திரலிங்கம்

August 12, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
கலை இலக்கியப் பயணத்தில் சாதித்த கலை இலக்கிய ஆளுமை – உதயன் ஆசிரியர் லோகேந்திரலிங்கம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஐம்பது ஆண்டு கால கலை இலக்கியப் பயணத்தில் சாதித்த கலை இலக்கிய ஆளுமை உதயன்
ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்கள்.

இளங்கவிஞராக உருவாகி, உள்நாட்டுப் போரின் விளைவாக, எதிர்கால கேள்விக் குறியுடன் கனடாவிற்கு புலம்பெயர்ந்து,
பின்னர் ஒரு பத்திரிகையாளராகவும் பத்திரிகை வெளியீட்டாளராகவும் தொடர்ந்து கனடாவிற்கேயுரிய பல இன–பல
கலாச்சார–பன்மொழிச் சூழலுக்கு ஏற்ப அரசியல்–சமூக–கலைத் தளங்களில்நன்கு அறியப்பட்ட ஆளுமையாக இப்போது
திகழ்பவர் கனடா உதயனின் பிரதம ஆசிரியர் திரு.நாகமணி லோகேந்திரலிங்கம்.

இவர், ஈரோட்டில் நடைபெற்றுவரும் 19-ஆவது புத்தகக் கண்காட்சியின் 7-ஆவது நாளின் உரையரங்கத்தின் நாயகராக
விளங்கினார். அவருக்கு உற்சாகமான வரவேற்பு அங்கு அளிக்கப்பெற்றது

தமிழக அரசின் ஆதரவுடன் ஈரோட்டைத் தளமாகக் கொண்ட மக்கள் சிந்தனைப் பேரவையின் முன்னெடுப்பில் இந்தப்
புத்தகத் திருவிழா நடைபெற்றாலும் இதன் அச்சாணியாகத் திகழ்பவர் த. ஸ்டாலின் குணசேகரன்.

அவரின் அறிமுக உரைக்குப்பின், சிறப்புரை நிகழ்த்திய திரு.லோகேந்திரலிங்கம், முதன்முதலாக கவிஞர் வைரமுத்து
உள்ளிட்ட இலக்கிய ஆளுமைகளை ஆண்டுதோறும் வரவழைத்து கனடவாழ் புலம்பெயர் தமிழரிடையே உரைநிகழ்த்த
வைக்கும் விதத்தை ஈரோட்டு புத்தகப் பெருவிழா கூட்ட அரங்கில் எடுத்துரைத்தார்.

தமிழ்நாட்டிலிருந்தும் ஈழத்திலிருந்தும் தான் அழைத்து கௌரவித்த கலை இலக்கிய ஆளுமைகளிடமிருந்து தாம் பல அறிவு சார்ந்த விடயங்களைக் கற்றுக்கொண்டதாகவும் தமிழகத்தை ஈழத்துமக்கள் தங்கள் தாய்த் தமிழகம் என்று அழைக்கின்றார்கள்.

மேலும் நம்பிக்கைகளோடு உள்ளார்கள் என்றும் உற்சாகத்தோடு தெரிவித்தார். அத்துடன் தான் சந்தித்த கலை இலக்கிய
வழிகாட்டிகளிடமிருந்து கற்றுக்கொண்டவற்றைக்கொண்டு தனது பத்திரிகைத்துறை மற்றும் இலக்கியத் தளம்
ஆகியவற்றில் தன்னைதக்கவைக்கும் வகையில் உதவுகின்றன என்றும் கடுமையான வாசிப்பு தான் தம் போன்றவர்களை
காப்பாற்றும் என்றும் அந்த வகையில் ஈரோடு புத்தகத் திருவிழாவில் மிகவும் மகிழ்ச்சியோடு கலந்து
கொள்வதாகவும் தெரிவித்தார்.

முதல் நாள் பெய்த கனமழையால் மணற்பரப்பு புழுதிபரவாமல் இருந்தாலும் வானம் சன்னமாக
உதிர்த்த நீர்த்திவலைகளைக் கண்டு, எங்கே இன்றும் மழைவந்து விடுமோ என்ற பதற்றம் எழுந்தாலும் அதைக்
காட்டிக்கொள்ளாமல் அளவுடன் பேசிமுடித்த இதழாசிரியர் லோகேந்திரலிங்கம் உரை, அரங்கில்
திரண்டுஇருந்தவர்களுக்கு புதுமையாக இருந்தது.

தமிழர் தாயகமான ஈழத்தையும் கனடாவையும் தமிழ்வழி இணைத்த அண்ணன் லோகேந்திரலிங்கம், கனடாவில்உதயன்
உதயமானது முதல் இன்று கதிர்பரப்பி நிற்கும் சூழல்வரை எடுத்தியம்பினார்.

அன்றைய தினம் லோகேந்திரலிங்கம் அவர்களோடு மேடையை அலங்கரித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘இசைக்கவி
ரமணன்’ அவர்களும் இசையோடு தனது உரையை வழங்கி சபையோரின் பாராட்டுக்களைப் பெற்றார்.

Tags: #tamilnews#Thamilaaram#ThamilaaramNewsjaffnasrilanka
Previous Post

யாழில் வெளிநாடு அனுப்புவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி..!

Next Post

கனடாவில் கடற்கரை ஒன்றில் மாயமான சிறுமி

Next Post
கனடாவில் கடற்கரை ஒன்றில் மாயமான சிறுமி

கனடாவில் கடற்கரை ஒன்றில் மாயமான சிறுமி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.