கலிபோர்னியாவின் நியூமேனில் உள்ள நெடுஞ்சாலைக்கு உயிரிழந்த இந்தியர் ரோனில் சிங் நினைவாக ‘கார்ப்ரல் ரோனில் சிங் நினைவு நெடுஞ்சாலை’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பிஜி தீவு பகுதியில் வசித்தவர் ரோனில் சிங். இந்திய வம்சாவளியான இவர் கலிபோர்னியா மாகாணத்தில் போலீசாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த மர்மநபர் ஒருவர் ரோனில் சிங்கை சுட்டுக்கொன்றார்.
இதனையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்திய பாலோ விர்ஜென் மெண்டோசா என்பவரை போலீசார் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கபப்ட்டது.
இதற்கிடையே துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ரோனில் சிங்கை அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ‘நாட்டின் கதாநாயகன்’ என அழைத்து பெருமைப்படுத்தினார்.
மேலும் ரோனில் சிங்கை கவுரவிக்கும் வகையில் கஸ்டானிஸ்லாஸ், மெர்சிட் ஆகிய நகரங்களில் உள்ள சாலைக்கு அவரது பெயரை வைக்க 2019-ம் ஆண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும் அதன் பின்னர் அது நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது கார்ப்ரல் ரோனில் சிங் நினைவு நெடுஞ்சாலை’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது
Discussion about this post