Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கறை பூச துடிக்கும் சாணக்கியன்: வியாழேந்திரன் விடுத்துள்ள பகிரங்க சவால்

August 4, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
கறை பூச துடிக்கும் சாணக்கியன்: வியாழேந்திரன் விடுத்துள்ள பகிரங்க சவால்
0
SHARES
Share on FacebookShare on Twitter

இராசமாணிக்கம் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) கடந்த சில நாட்களுக்கு முன்னர் தன் மீது அபாண்டமாக குற்றம் சுமத்தி அதனூடாக அரசியல் செய்து தன் மீது கறை பூச துடிப்பதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் (S. Viyalanderan) குற்றம் சுமத்தியுள்ளார்.

தமது பிரத்தியேக செயலாளர் மற்றும் உதவியாளர் இலஞ்ச ஊழல் அதிகாரிகளினால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டமை தொடர்பில் தனியார் ஊடகங்களுக்கு தமது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சாணக்கியன் கருத்து தெரிவித்துள்ளாக  வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சம்பவ தினமான அன்று தான் அங்கு இருந்ததாகவும் இலஞ்ச ஊழல் அதிகாரிகள் வருகைத்தந்திருந்த வேலை அங்கிருந்து தாம் முச்சக்கர வண்டி ஒன்றில் தப்பி சென்றதாகவும் பகிரங்கமாக பொய் குற்றச்சாட்டினை சுமத்தி வதந்திகளை பரப்பி இதனை வைத்து அரசியல் இலாபம் காண துடித்து வருகின்றதாகவும் இராஜாங்க அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்

பகிரங்க சவால்

அவ்வாறு தாம் எவரிடமும் இலஞ்சம் வாங்கவில்லை எனவும் இலஞ்ச ஊழல் ஆணைக் குழு அதிகாரிகள் ஆதரவாளரை கைது செய்த இடத்தில் தான் அவ்விடத்தில் இருக்கவில்லை எனவும் தனது மெய்ப்பாதுகாவலர் மூலம் அதனை தன்னால் நிரூபிக்க முடியும் எனவும் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்பு படுத்தி திரிபு படுத்திய கருத்துக்களை வெளியிட்ட சாணக்கியன், அந்த சம்பவத்தின் போது தான் இருந்ததை நிரூபித்து காட்டினால் தான் அரசியலில் இருந்து முற்றாக விடை பெறுவதாகவும் அவ்வாறு நிரூபிக்காவிட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அரசியலில் இருந்து விடை பெறுவாரா? என பகிரங்க சவால் விடுவதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

மான நஷ்ட ஈடு வழக்கு

இதேவேளை, தாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை செய்து வருவதினை பொறுக்க முடியாமல் பொய்களை மாத்திரம் கூறி அரசியல் செய்து வரும் சாணக்கியன், தன்னை பற்றி அவதூறு கூறுவதற்கு எந்த வகையிலும் தகுதி இல்லை என்றும் வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்

மேலும், பல தடவைகள் சாணக்கியன் தன்னுடன் நேரடியாகவும் சரி மறைமுகமாகவும் சரி பல சவால்களை விட்டு இருக்கின்றார் என்றும் பொய்யாக வதந்திகளை பரப்பி அதில் அரசியல் இலாபம் காண துடிக்கும் சாணக்கியனுக்கு எதிராக தான் மான நஷ்ட ஈடு வழக்கு ஒன்றை பதிவு செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

Previous Post

மன்னாரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இளம் தாயின் மரணம்: தண்டனைக்கு உறுதியளித்த எம். பி

Next Post

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்காத ஜனாதிபதிகள்: சுட்டிக்காட்டிய எம்.பி

Next Post
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்காத ஜனாதிபதிகள்: சுட்டிக்காட்டிய எம்.பி

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்காத ஜனாதிபதிகள்: சுட்டிக்காட்டிய எம்.பி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.