கறுவா ஏற்றுமதி மூலம் வருடத்தின் முதல் 6 மாதங்களில் 15 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக கறுவா அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் 60 மெட்ரிக் தொன் கறுவா ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் ஜனக லிந்தர குறிப்பிட்டார். மெக்ஸிகோ, பேரு மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கே அதிகளவில் கறுவா ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கடந்த ஆண்டு 251 மெட்ரிக் தொன் கறுவா ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது
Discussion about this post