கரையோர புகையிரத மார்க்கத்தின் பயண அட்டவணையில் இன்று (01.01.2024) முதல் அமுலாகும் வகையில் திருத்தம் மேற்கொள்வதற்கு தொடருந்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, மாத்தறை தொடருந்து நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் ருஹுணு குமாரி கடுகதி தொடருந்து, நாளை முதல் பெலியத்த தொடருந்து நிலையத்தில் இருந்து காலை 5.25க்கு பயணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், வார நாட்களில் மட்டும் இயக்கப்பட்ட சாகரிகா கடுகதி புகையிரதத்தை சனிக்கிழமைகளிலும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், வார நாட்களில் இரவு 8.35க்கு மருதானையில் இருந்து தெற்கு பயாகலை வரை முன்னெடுக்கப்படும் தொடருந்து சேவை இன்று (01.01.2024) முதல் அளுத்கம வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறே, மருதானையில் இருந்து அளுத்கம வரை பிற்பகல் 2 மணிக்கு இயக்கப்படும் தொடருந்து இன்று (01.01.2023) முதல் பிற்பகல் 1.55க்கு பயணத்தை ஆரம்பிக்குமென புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.
Discussion about this post