கனேடிய மாகாணமொன்றில், மூன்று மாதங்களுக்குப் பெய்யவேண்டிய அளவிலான மழை ஒரே நாளில் கொட்டித்தீர்த்ததால் பெருவெள்ளம் ஏற்பட்டது.
கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் கடந்த வார இறுதியில் அடித்த கனமழையால் பெருவெள்ளம் உருவானது.
இது குறித்து கவலை தெரிவித்த ஹாலிஃபாக்ஸ் மேயரான Mike Savage, பைபிளில் சொல்லப்பட்டது போன்ற ஒரு பயங்கர மழை இரவும் பகலும் பெய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பெருவெள்ளத்தில் கார்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஒரு காரிலிருந்த 52 வயது நபர் ஒருவரின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் பயணித்த கார் கிடைத்துள்ள நிலையில், அதிலிருந்த இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்கள்.
மேலும், மற்றொரு வாகனத்தில் பயணித்த இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்றுபேர் மாயமாகியுள்ள நிலையில், அந்த வாகனத்தில் பயணித்த மூன்று பேர் தப்பி வெள்ளத்திலிருந்து கரையேறிவிட்டார்கள். அந்த சிறுவர்கள் பயணித்த வாகனமும் கிடைத்துள்ளது, ஆனால், பிள்ளைகள் அந்த வாகனத்தில் இல்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்கிறது.
Discussion about this post