கனேடிய மக்கள், உலகில் அதிகமாக விரும்பும் நாடுகளின் வரிசையில் பிரித்தானியா முன்னணி வகிக்கின்றது என தெரிவிக்கப்படுகிறது.
கனடாவின் ரிசர்ச் கோ என்னும் நிறுவனம் இது தொடர்பில் கருத்துக் கணிப்பு மேற்கொண்டுள்ளது. கனேடிய மக்கள் அதிகம் விரும்பும் நாடுகளின் வரிசையில், பிரித்தானியா மற்றும் ஜப்பான் முன்னிலை வகிக்கின்றன.
கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 74 வீதமானவர்கள் இந்த இரண்டு நாடுகள் மீது விருப்பத்தை வெளியிட்டுள்ளனர். 55 வயதுக்கும் மேற்பட்ட கனடியர்கள் கூடுதல் அளவில் பிரித்தானியாவை விரும்புவதாக கருத்துக் கணிப்பு தெரியவந்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியா, சஸகட்ச்வான்; மற்றும் மெனிற்றோபா ஆகிய மாகாணங்களில் பிரித்தானியாவிற்கு கூடுதல் ஆதரவு காணப்படுகின்றது. இதேவேளை, வடகொரியா கனேடிய மக்களினால் அதிகம் வெறுக்கப்படும் நாடாக பட்டியலிடப்பட்டுள்ளது.
Discussion about this post