கனடாவில் லிபரல் அரசாங்கம் அறிமுகம் செய்துள்ள இணைய செய்தி தொடர்பான புதிய சட்ட காரணமாக அதிக எண்ணிக்கையிலான கனடியர்கள் கவலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
பில் சி 18 அல்லது இணைய செய்தி சட்டம் காரணமாக கனடிய மக்கள் எதிர்வரும் காலங்களில் மெட்டா, கூகுள் போன்ற உலகின் முதல் நிலை தொழில்நுட்ப நிறுவனங்களின் சில வசதிகளை பெற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக முகநூல் மற்றும் கூகுள் போன்றவற்றின் செய்திகளை பார்வையிட முடியாத ஒரு சூழ்நிலை உருவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் கனடிய மக்கள் மிகுந்த கரிசனையை வெளியிட்டுள்ளனர்.
Discussion about this post