அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் கனடா பயணத்திற்கு முன்பாக கனேடிய மக்களுக்காக ஆலோசனை கூட்டம் ஒன்று கூடியதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கனடாவும், அமெரிக்காவும் சனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான மரியாதை ஆகியவற்றில் நிலைநிறுத்துவதில் உறுதியான நட்பு நாடுகளாக உள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மார்ச் 23ஆம் திகதி கனடாவுக்கு வருகை புரிய உள்ளார் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார்.
எல்லையின் இருபுறமும் உள்ள அனைவருக்கும் பயனளிக்கும் பொருளாதார வளர்ச்சியை உந்துதல் போன்றவை குறித்து இருநாட்டு தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.
இந்த நிலையில், ஜோ பைடனின் பயணத்திற்கு முன்பாக ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
‘ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, NAFTA ஆலோசனைக் குழு ஒன்று சேர்ந்து கனேடிய தொழிலாளர்களுக்காக போராடியது. கனேடியர்களுக்காக நாம் இன்னும் என்ன செய்ய முடியும் என்பது பற்றிய அவர்களின் யோசனைகள் மற்றும் உள்ளீடுகளைப் பெறவும், நமது பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்ளவும் அடுத்த வாரம் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் விவாதிக்க உள்ளேன். அதற்கு முன்பாக இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினோம்’ என தெரிவித்துள்ளார்.
Discussion about this post