கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவிற்கு அச்சுறுத்தல் விடுத்த நபருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
பிரதமர் மற்றும் கியூபெக் மாகாண முதல்வருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக நபர் ஒருவர் வழக்கு விசாரணைகளில் ஒப்புக்கொண்டுள்ளார்.
கனடிய பிரதமர் ட்ரூடோ மற்றும் குபெக் மாகாண முதல்வர் பிரான்சுவா லெகால்ட் ஆகியோருக்கு குறித்த கொலை மிரட்டல் விடுத்ததாக சம்பந்தப்பட்ட நபர் ஒப்புக் கொண்டுள்ளார்.
30 வயதான ஜெர்மெய்ன் லீமெய் என்ற நபர் மீது கொலை அச்சுறுத்தல் விடுத்தமை குறித்து குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுக்கள் லீமெய் மீது சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கும் செப்டம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post