கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் உத்தியோகபூர்வ விமானத்தில் மீண்டும் கோளாறு ஏற்பட்டுள்ளது.
ஜமைக்காவிற்கு பயணம் மேற்கொண்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விமானம் கடந்த நான்கு மாதங்களில் இரண்டாவது முறையாக பழுதடைந்துள்ளது.
கனேடிய ஆயுதப் படைகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது, சிக்கலைத் தீர்ப்பதற்காக பழுதுபார்க்கும் குழுவுடன் இரண்டாவது விமானத்தை அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளன.
கனடா பிரதமர் அந்நாட்டு இராணுவத்திற்கு சொந்தமான விமானத்தை பயன்படுத்துகிறார்.
கடந்த ஆண்டு செப்டெம்பரில் இந்தியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் ட்ரூடோ, அதிகாரபூர்வ விமானத்தில் ஏற்பட்ட பிழை காரணமாக இந்தியாவில் கூடுதல் நாட்கள் தங்க வேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post