கனேடிய (Canada) ஆய்வாளர்களால் வைத்தியசாலைகளில் இடம்பெறக் கூடிய திடீர் மரணங்களை தவிர்ப்பதற்காக புதிய செயற்கை நுண்ணறி தொழில்நுட்பமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தொழிநுட்பத்தின் மூலம் நோயாளிகளுக்கு மரணம் ஏற்படக்கூடிய நிலைமைகள் தொடர்பில் முன்கூட்டியே அறிந்துக் கொள்ள முடியும் என கூறப்படுகிறது.
இதன் படி, கனேடிய மருத்துவ ஒன்றியத்தினால் இது தொடர்பான தகவல் குறித்த நிறுவனத்தின் சஞ்சிகையிலும் வெளியிடப்பட்டுள்ளது.
அவசர சிகிச்சைகள்
மேலும், அவசர சிகிச்சைகள் தேவைப்படும் நோயாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்குவதற்கு இந்த புதிய முறை பயன்படும் என டொரன்டோ மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
நோயாளிகளின் நிலைமை பாதிக்கப்படுவதை கண்டறிந்து மருத்துவர்களுக்கு அறிவிக்கும் முறைமையாக இந்த புதிய முறைமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மருத்துவத்துறையில் மாத்திரமின்றி பல்வேறு துறையகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post