கனடாவிற்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டு மாணவர்களை பாதுகாப்பதற்கு புதிய நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கனேடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மாணவர் வீசா பெற்று கனடாவில் கற்க வரும் சர்வதேச மாணவர்கள் மோசடிகாரர்களிடம் சிக்காமல் இருப்பதனை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடிவரவு முகவாகள் போலி ஏற்றுக்கொள்ளல் கடிதங்களை வழங்கி வந்தமை தெரியவந்துள்ளது. கல்லூரிகளில் மாணவர்களை ஏற்றுக் கொள்வது தொடர்பில் இவ்வாறு போலி கடிதங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 1ம் திகதி தொடக்கம் மாணவர்களை அனுமதிக்கும் கல்லூரிகள் தனித்தனியாக மாணவர்களின் விண்ணப்பங்களை உறுதி செய்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டாக போலி கடிதங்கள் வெளியிடப்படுவதனை தவிர்க்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Discussion about this post