கனடா வாழ் மாமாவினால் யாழ்ப்பாண விமான நிலையத்தில் நேற்றையதினம் (16) ஐந்து இளைஞர்கள் கைது செய்யபப்ட்டுள்ளார்.
போலி கனேடிய கடவுச்சீட்டில் கனடாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற யாழ்ப்பாண இளைஞர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யபப்ட்டுள்ளார்.
சட்டவிரோத கனடா பயணம்
கைதானவர் 24 வயதான பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் கத்தாரின் தோஹா நோக்கிச் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
விமான அனுமதியின் போது அவர் வழங்கிய கனேடிய கடவுச்சீட்டில் சந்தேகம் எழுந்ததால், மேலதிக விசாரணைக்காக அழைக்கப்பட்டார்.
யாழ் இளைஞனிடம் உண்மையான இலங்கை கடவுச்சீட்டும் அவரிடம் காணப்பட்டதாகவும், அதுமட்டுமல்லாமல் மாலைதீவுக்கு செல்வதற்கான போலியான Gulf Airlines விமான டிக்கெட்டையும் கண்டெடுத்ததாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
முதலில் இலங்கை ஏர்லைன்ஸ் கவுன்டர்களில் போலி கனேடிய கடவுச்சீட்டை சமர்ப்பித்து தோஹா சென்று அங்கிருந்து கனடா செல்வதற்கான விமான டிக்கெட்டுகளை பெற்றுக் கொண்டு குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் குடிவரவு பிரிவில் மாலத்தீவு செல்வதாக கூறியுள்ளார்.
எனினும் கடைசி வாயிலில், Gulf Airlines விமானத்தில் மாலைதீவு செல்வதாக போலி டிக்கெட்டுகளை காட்டி உள்நுழைந்து, தோஹாவுக்கு புறப்பட வேண்டிய விமானத்தில் ஏற திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
கனடாவில் உள்ள மாமா ஒருவர் அவரை கனடாவுக்கு அழைக்க உதவியதாகவும், இலங்கையில் உள்ள தரகர் ஒருவருக்கு 40 லட்சத்தை கொடுத்து கனடா பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் கைதான குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் இளைஞனை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
Discussion about this post