கனேடிய குடிமகன் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனேடிய பிரதமர் கூறியதால் மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் சிலர் சீரியஸாக கருத்துக்கள் கூறத்துவங்கிய நிலையில், அவர் இந்தியா தொடர்பான பிரச்சினை குறித்து சம்பந்தமேயில்லாமல் பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதால் இணையத்தில் கடுமையாக கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி வருகிறார்.
கனேடிய குடிமகன் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து கனடா இந்திய தூதரக உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சம்பந்தமேயில்லாத நாடுகளுடன் எல்லாம் இந்தியா குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்திவருகிறார்.
முதலில் ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியான Mohamed Bin Zayed உடன் பேச்சுவார்த்தை நடத்திய ட்ரூடோ, பின்னர் ஜோர்டான் நாட்டின் மன்னரான Abdullah II bin Al-Husseinஉடன் இந்தியா குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்
இப்படி இந்தியா கனடா பிரச்சினைக்கு சம்பந்தமில்லாத நாடுகளுடன் எல்லாம் ட்ரூடோ பேசிவருவதையடுத்து, இணையத்தில் அவர் கடுமையான கேலி கிண்டலுக்கு ஆளாகிவருகிறார்.
ட்ரூடோ குறித்த பல வேடிக்கையான மீம்கள் இணையத்தில் உலா வரத் துவங்கியுள்ளன.
Discussion about this post