கனடா அனுப்புவதாக கூறி யாழ்ப்பாண இளைஞனிடம் 21 இலட்ச ரூபாய் மோசடி செய்த பல்கலைக்கழக பெண் உத்தியோகஸ்தரும், அவரது கணவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான தம்பதியரை விசாரணைகளின் பின்னர் யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து, இருவரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், தென் பகுதியில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் தகவல் தொடர்பாடல் உத்தியோகஸ்தராக கடமையாற்றும் பெண்ணொருவர் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை கனடாவுக்கு அனுப்புவதாக கூறி 21 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ளார்.
பணத்தை இழந்த இளைஞன் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிடம் முறையிட்டுள்ளார். இதை அடுத்து , முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேக நபரான பெண்ணை கைது செய்தனர்.
பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த மோசடி சம்பவத்துடன் , அவரது கணவனுக்கும் தொடர்பு இருப்பதனை கண்டறிந்து கணவனையும் கைது செய்த நிலையில், இருவரையும் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது.
Discussion about this post