கனடா – அமெரிக்காவுக்கான தரை வழி நவம்பர் 8ஆம் திகதி திறக்கப்படவுள்ளது எனினும் முழுமையாக தடுப்பூசிகளை பெற்ற கனடிய மக்கள் தரை, வான் வழியாகவும் மற்றும் நீர்வழி வழியாகவும் அத்தியாவசியம் அல்லாத நோக்கங்களுக்காகவும் அமெரிக்க சென்றுவர முடியும். விமானம் மூலம் பயணிப்போர், தமக்கு கோவிட் 19 தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தும் பரிசோதனை முடிவுகளை தொடர்ந்தும் சமர்ப்பிக்க வேண்டும். தரைவழி மற்றும் நீர்வழி பயணிப்போருக்கு அவ்விதிமுறை அமுல்படுத்தப்படாது. இதேவேளை, AstraZeneca தடுப்பூசிகளை, அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் அதிகாரசபை அங்கீகரிக்காத போதிலும், உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை பெற்று முடித்த வெளிநாட்டு பயணிகளையும் நாட்டுக்குள் அனுமதிக்கவுள்ளதாக, ஐக்கிய அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ள நிலையில், AstraZeneca தடுப்பூசிகளை பெற்ற கனடிய மக்களும் அங்கு சென்றுவரக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. எனினும், அமெரிக்காவை விட கனடாவிலேயே தடுப்பூசிகளை பெற்ற வீதம் உயர்வாக உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள கனடிய அரசு, பாதுகாப்பாக பயணங்களை மேற்கொள்ளும் படியும், அவசியமான தேவைகளுக்கு மட்டுமே அமெரிக்காவுக்கு செல்லும்படியும், கனடிய மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post