கனடாவின் பாதுகாப்பு செலவுகள் தொடர்பில் அமெரிக்க சபாநாயகர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றின் சபாநாயகர் மைக் ஜான்சன் இந்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.
கனடாவின் பாதுகாப்பு செலவு வெட்கப்படும் வகையில் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கனடா குளிர் காய்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எல்லைப் பகுதியில் அமெரிக்கா கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் இதன் காரணமாக கனடா அசம்பந்த போக்காக செயற்பட்டு வருகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது வெட்கப்பட வேண்டிய விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.
நேட்டோ அமைப்பில் அங்கம் வசிக்கும் கனடா அந்தந்த நாடுகளுக்குரிய வகிபாகத்தை நிறைவேற்ற தவறி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு வீதம் அளவில் பாதுகாப்பு செலவிற்கு ஒதுக்க வேண்டியது அவசியமானது என நேட்டோ அறிவித்துள்ளது.
இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் கனடிய அரசாங்கம் இதுவரையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு வீதத்தை பாதுகாப்பு செலவுகளுக்கு ஒதுக்க தவறி உள்ளதாக அவர் குற்றம் சுமத்தி உள்ளார்.
தற்பொழுது கனடிய அரசாங்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.37 வீதம் அளவிலேயே பாதுகாப்பிற்காக செலவிடுகின்றது என தெரிவித்துள்ளார்.
நேட்டோ உறுப்பு நாடுகளில் மிகக் குறைந்த அளவில் பாதுகாப்பிற்கு செலவிடும் நாடுகளில் ஒன்றாக கனடா திகழ்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவாகும் நிலையில் அமெரிக்காவில் விசேட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
அந்த நிகழ்வில் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post