கனடாவில் கல்வி கற்பதற்காக இந்தியாவிலிருந்து வந்த இளம்பெண் ஒருவர், விலைவாசி உயர்வால் அவதிப்படுவதுடன், பேசாமல் வேறொரு நாட்டுக்குச் சென்றுவிடலாமா என யோசித்துக்கொண்டிருக்கிறார்.
இந்தியாவின் கொல்கொத்தாவைச் சேர்ந்தவர் ஷ்ரமானா சர்க்கார் (24). நிலவியலில் முனைவர் பட்டம் பெறும் இலக்குடன் 2018ஆம் ஆண்டு கனடாவுக்குச் சென்றார்.
மாதம் 350 டொலர்கள் வாடகையில் அறை ஒன்றில் தங்கி இளங்கலை படிப்பைத் துவக்கினார் ஷ்ரமானா. ஆனால், ஆண்டுகள் செல்லச் செல்ல, அறை வாடகையும் விலைவாசியும் உயர, பகுதி நேர பணி ஒன்றில் இணைந்தார் அவர்.
இன்று அவரது அறை வாடகை இரண்டு மடங்காக அதிகரித்துவிட்டது. மளிகைப் பொருட்கள் விலை 20 சதவிகிதம் அதிகரித்துவிட்டது. ஆனால், சம்பளம் உயரவில்லை. தான் படிக்கும் இடத்திலேயே ஒரு பகுதி நேர வேலை, இன்னும் இரண்டு காஃபி ஷாப்களில் வேலை என மூன்று இடங்களில் வேலை பார்த்தும், கிடைக்கும் வருவாய் அடிப்படைத் தேவைகளுக்கு மட்டுமே சரியாக இருக்கிறது.
காலையில் எழுந்து படிக்கச் செல்லவேண்டும், அடுத்தது ஒரு பகுதி நேர வேலை, பிறகு வீடு, பிறகு பேருந்தில் ஏறி அடுத்தடுத்த இடங்களில் வேலை என முழு நேரமும் வருவாயைக் குறித்தே நினைத்துக்கொண்டிருப்பதால், படிப்பைக் குறித்து யோசிக்க கொஞ்சம் நேரமே கிடைக்கிறது ஷ்ரமானாவுக்கு.
இந்த நிலை ஷ்ரமானாவுக்கு மட்டுமல்ல என்கிறார் மனித்தோபா பல்கலை தொழிலாளர் வரலாற்றாளரான ஜூலியா (Julia Smith).
இப்படி, கனடாவை நம்பி படிப்புக்காகவும், வேலைக்காகவும் வரும் வெளிநாட்டவர்கள் பலர், சட்டப்படி வருபவர்கள் கூட, வேறெங்காவது சென்றுவிடலாமா என எண்ணும் நிலை கனடாவில் அதிகரித்து வருவதற்கு ஷ்ரமானாவின் கதை மற்றொரு உதாரணம்.
Discussion about this post