கனடாவில் எட்டு வயது சிறுமியை கொலை செய்த குற்றத்திற்காக 79 வயதான பெண் ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ஒன்றாரியோவின் லண்டன் நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்துள்ளது.குறித்த பெண் வாகனம் ஒன்றில் எட்டு வயது சிறுமியையும் வேறும் சிலரையும் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் எட்டு வயது சிறுமி உயிர் இழந்துதுடன் மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளில் குறித்த மூதாட்டிக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.பெட்ரோனெல்லா மெக்னோர்கன் என்ற பெண்ணுக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.குறித்த பெண் இரண்டு ஆண்டுகளுக்கு வீட்டு காவலில் இருக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு வாகனம் செலுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.கவனயீனமாக வாகனத்தை செலுத்தி உடல் ரீதியான தீங்கு விளைவித்தார் என குறித்த பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.குறித்த பெண் வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும் வாரத்தின் வியாழக்கிழமை நாட்களில் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரையிலான கால பகுதியில் மட்டும் அத்தியாவசிய பொருட்களை கொள்ளளவு செய்வதற்கு வெளியே செல்ல முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.சனிக்கிழமைகளில் தேவாலயத்திற்கு செல்ல முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post