கனடாவில் கடந்த 2022ம் ஆண்டில்; மொத்தமாக ஐந்து மில்லியன் பேருக்கு உலநலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் உள ஆரோக்கியம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.
கடந்த ஒரு தசாப்த காலமாக கனடியர்கள் உள ஆரோக்கிய பிரச்சினைகளினால் பாதிக்கப்படும், சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
கடந்த பத்தாண்டு காலப் பகுதியில் உள ஆரோக்கிய குறைபாடுகளுக்கு உள்ளான 15 வயதுக்கும் மேற்பட்ட கனடியர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்வடைந்துள்ளது. அதிகளவான மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உளச் சுகாதார பிரச்சினைகளினால் பாதிக்கப்படடுள்ளனர்.
ஆண்களை விடவும், பெண்களே அதிகளவில் உளச் சுகாதார தாக்கங்களினால் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Discussion about this post