கனடாவில் சுகாதாரம் மற்றும் சமூக உதவித் துறையில் காலியிடங்கள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன என்று அண்மைய ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
கனடாவில் கடந்த ஓகஸ்ட் மாதத்துக்கான வேலை, வருவாய் மற்றும் வேலை நேரம், வேலை காலியிடங்கள் உள்ளிட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் சமூக உதவித் துறையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன.
மருத்துவமனைகளில் போதிய ஊழியர்கள் இல்லாததால், சில அவசரகால அறைகளை தற்காலிகமாக மூட வேண்டிய நிலை அல்லது பிற சேவைகளை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சுகாதார துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப கனடா புலம்பெயர்ந்தோரை பெரிதும் நம்பியுள்ளது. கனடாவில் பதிவுசெய்யப்பட்ட தாதியர்களில் கால் பகுதியினர் மற்றும் 36 சதவீத மருத்துவர்களும் கனடாவில் பிறந்தவர்கள் அல்லர்.
தற்போது கனடா தற்போது வெளிநாட்டு பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளர்கள் குடியேறுவதை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
Discussion about this post