450 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் கனடாவின் (Canada) ஒட்டாவாவில் (Ottawa) புதிய விஞ்ஞான ஆய்வு கூடம் உருவாக்கப்பட உள்ளது.
குறித்த ஆய்வு கூடமானது, சுமார் ஒரு பில்லியன் டொலர் முதலீட்டில் ஒட்டாவா தேசிய ஆய்வு பேரவையால் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதார அபிவிருத்தி
இந்த நிலையில், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை சமூக அபிவிருத்தி அமைச்சர் ஜின்னா சொட்ஸ் அறிவித்துள்ளார்.
இதன் படி, இந்த ஆய்வு கூடமானது, கார்பன் வெளியீட்டை குறைத்து, பொருளாதார அபிவிருத்தி திட்டங்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நிர்மாண பணிகள்
மேலும், இதன் கட்டட நிர்மாணத்திற்கான ஒப்பந்தங்கள் ஏற்கனவே செய்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
Discussion about this post