கனடாவில் (Canada) கடந்த இரண்டு வருடங்களில் மாத்திரம் வீட்டு வாடகை தொகைகள் 22 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக அண்மையில் வெளியாகியுள்ள அறிக்கையொன்றின் படி தெரியவந்துள்ளது.ரென்டல்ஸ்.சீஏ (Rentals.ca) இணையத்தளம் ஒன்றில் கனடாவின் வீட்டு வாடகைகள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
வாடகை தொகை அதிரிப்புஅதன் படி, குறித்த இணையத்தளம் வெளியிட்டுள்ள தகவலில், கனடாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாத்திரம் இரு தடவைகள் வீட்டு வாடகை தொகை அதிரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த அதிகரிப்பு கனடாவின் வாடகை அதிகரிப்பு வழிகாட்டல்களை விடவும் அதிக தொகையில் உள்ளதாகவும் இவ்வாறு வீட்டு உரிமையாளர்கள் கூடுதல் அளவில் பணம் சம்பாதிக்க அனுமதிக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.தற்போதைய வாடகைஎனினும், வீடு ஒன்று வெற்றிடமாகும் போது, கட்டுப்பாடுகளின்றி வீட்டு உரிமையாளர்களுக்கு வாடகை தொகையை அதிகரிக்க முடியும்.
இந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 அறைகளைக் கொண்ட வீடு ஒன்றின் வாடகை தொகை 1472 டொலர்களாக பதிவாகியுள்ளதுடன் இந்த தொகை தற்போது 1761 டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிபட்டுள்ளது.
Discussion about this post