கனடாவில் வீடு விற்பனைகளில் சாதகமான மாற்றம் பதிவாகியுள்ளதாக ரியல்எஸ்டேட் நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
வீட்டு விற்பனை அதிகரித்துள்ளதாக கனடிய ரியல் எஸ்டே ஒன்றியம் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் கூடுதல் அளவில் வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜூன் மாதத்தை விடவும் ஜூலை மாத வீட்டு விற்பனை 8.7 வீதத்தினால் அதிகரித்துள்ளது. எனினும், ரொறன்ரோ பெருநகர பகுதியில் வீட்டு விற்பனையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜூலை மாதம் சராசரியாக வீடு ஒன்றின் விலை 668754 கனேடிய டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2022ம் ஆண்டை விடவும் இந்த ஆண்டில் வீடு விற்பனை 6 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
Discussion about this post