கனடிய மக்கள் வீடு கொள்வனவு தொடர்பில் எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர் என்பது குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கனடாவில் வீடுகளுக்கான கிராக்கி பெருமளவில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், குறிப்பிடத்தக்களவான மக்கள் அடுத்த ஆண்டுக்குள் வீடு கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
நெர்ட்வெல்லட் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 49 வீதமானவர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வீடுகளை கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டில் நடத்தப்பட்ட கருத்துக் கிணப்பின் போது இந்த எண்ணிக்கை 43 வீதமாகவே காணப்பட்டது.
பத்து வீதமான கனடியர்கள் எதிர்வரும் 12 மாத காலப்பகுதிக்குள் வீடுகளை கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
சுமார் 4.4 வீதமான மக்கள் இவ்வாறு வீடு கொள்வனவு செய்ய உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வட்டி வீத அதிகரிப்பு மற்றும் நிரம்பல் குறைவு போன்ற காரணிகளைத் தாண்டி மக்கள் வீடுகளை கொள்வனவு செய்தில் நாட்டம் காட்டி வருவதாக கருத்துக் கணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனவரி மாதம் இந்தக் கருத்துக் கணிப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
Discussion about this post