பெரும்பாலான நாடுகளைப்போலவே கனடாவுக்கும் அதன் பொருளாதார வளர்ச்சிக்காக புலம்பெயர்ந்தோர் தேவை என்பது மறுக்கமுடியாத உண்மை.
பல நாடுகள், இன்று புலம்பெயர்ந்தோரின் சேவைகளுக்காக காத்திருக்கின்றன. பண்ணைகளில் பழம் பறிக்கும் பணி செய்வோரிலிருந்து, திறன்மிகுப் பணியாளர் வரை, பலதரப்பட்ட வெளிநாட்டுப் பணியாளர்கள் பல நாடுகளின் பொருளாதரத்தை உயர்த்த தேவைப்படுகிறார்கள்.
ஆனால், புலம்பெயர்ந்தோரால் தங்களுக்கு இழப்பு என்பதுபோன்ற ஒரு தோற்றத்தையே பல நாடுகள் கொடுத்துவருகின்றன.
கனடாவைப் பொருத்தவரை, கனடாவில் வீடுகள் பற்றாக்குறைக்கு புலம்பெயர்ந்தோரே காரணம் என்பதுபோன்ற ஒரு மாயையான தோற்றம் காட்டப்படுகிறது. ஆனால், உண்மை நிலை என்ன? கனடாவில் வேலை செய்யும் வயதிலிருப்போரின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. இவ்வளவு காலம் வேலை செய்த ஒரு பெரிய கூட்டம், இப்போது ஓய்வு பெறப்போகிறது.
ஆகவே, அந்த எண்ணிக்கையை ஈடு செய்ய கனடாவுக்கு வெளிநாட்டுப் பணியாளர்கள் தேவை.
Discussion about this post