கனடாவில் வீடற்றவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்நாட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
மேலும், வீடற்றவர்களுக்கு உதவும் பணியாளர் தொகையும் சடுதியான அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது. 2021ம் ஆண்டுடன் நிறைவடைந்து ஐந்தாண்டு காலப் பகுதியில் வீடற்றவர்களுக்கு உதவும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பணியாளர் எண்ணிக்கை சுமார் 60 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
வீடற்றவர்களுக்கு உதவிகளை வழங்கும் அதிகமான பணியாளர்கள் பெரும் நகரங்களில் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வீடற்றவர்களுக்கு உதவும் பணிகளில் ஈடுபட்டு வரும் பணியாளர்களும் வறுமை நிலையில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post