ரொரன்டோவில் வீடுகளை வாடகைக்கு வழங்குவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டு உரிமையாளர் போன்று தோன்றி வீட்டை வாடகைக்கு விடுவதாக கூறி குறித்த நபர் பலரிடம் பணம் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரொரன்டோ பொலிசார் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முகநூல் ஊடாக விளம்பரம் செய்து கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையில் குறித்த நபர் பலரை ஏமாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீட்டை வாடகைக்கு வழங்குவதற்காக முற்பணமாக பணம் பெற்றுக் கொண்டு இந்த நபர் வீடுகளை வாடகைக்கு வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
800 டொலர்கள் வைப்பிலிட்டு பட்டியலில் இணைந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பணம் செலுத்திய பின்னர் குறித்த நபர் சகல தொடர்புகளையும் துண்டித்துக் கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. 47 வயதான ஹிந்தி டெய்லர் என்ற நபரை இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இந்த நபரினால் ஏமாற்றப்பட்டவர்கள் தங்களது முறைப்பாடுகளை பொலிசாரிடம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post